உலக செய்திகள்

கண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை பயிற்சி செய்யும் சிறுமி

கண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை பயிற்சி செய்யும் சிறுமி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

உக்ரைனில், சிறுமி ஒருவர் கண்களை மூடிக்கொண்டு குத்து சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டின் ஹார்கிவ் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி கிரா மகோகோனேன்கோ, தனது குத்துச்சண்டை பயிற்சியின் திறனை அதிகரிக்க கண்களை மூடிக்கொண்டு குத்துண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மகள் பயிற்சியாளருடன் கண்களை மூடிக்கொண்டு பயிற்சியில் ஈடுபடுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்த சிறுமியின் தந்தை, அதனை வீடியோ எடுத்து வலைதளத்தில் பரவவிட்டுள்ளார்.