உலக செய்திகள்

குவைத் விமான நிலையத்தின் முனையம்-1 இன்று அதிகாலை முதல் மீண்டும் தொடங்கியது

இதன்பின்பு பயணச்சீட்டு கட்டணங்கள் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத்,

ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி-28 விமான நிலையம் மூடபட்ட நிலையில், தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட ரேடார் அமைப்புகள், விமான நிலையத்தின் சில பகுதிகள் சரி செய்யபட்டு சர்வதேச விமான நிலைய இயக்க அமைப்பின் அனுமதி கிடைத்த நிலையில் கடந்த ஏப்ரல்-26 முதல் முனையம்-4 மற்றும் முனையம்-5 திறக்கப்பட்டு குறிபிட்ட சில நாடுகளின் முக்கிய நகரங்களுக்கு நாட்டின் அரசு விமான நிறுவனங்களான ஜசீரா ஏர்வேஸ் மற்றும் குவைத் எயர்வேஸ் விமானங்களின் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று(ஜூன்-1) முதல் முனையம்-1 திறக்கப்பட்டு மற்ற சர்வதேச விமானங்களின் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனால் பயணச்சீட்டு கட்டணங்கள் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.