லண்டன்,
இந்தியாவின் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தலைவராக செயல்பட்டவர் லலித்மோடி, இவர் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே லலித்மோடி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி சென்றனர்.
அவர் கடந்த 16 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து குடியுரிமையை தான் பெற்றிருப்பதாக லலித்மோடி அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
நான் ஒரு இங்கிலாந்து குடிமகனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில், எனது இங்கிலாந்து குடியுரிமையைக் கொண்டாடினேன். இங்கிலாந்து பல ஆண்டுகளாக எனது இல்லமாக இருந்து வருகிறது. இங்கிலாந்து குடிமகனாக மாறியதை ஒரு பெரும் பாக்கியமாகவும், பொறுப்பாகவும் கருதுகிறேன். மிகுந்த பெருமை யுடனும், நன்றியுணர்வுடனும், இந்த நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதில் உண்மையான மகிழ்ச்சியுடனும் இதனை ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.