உலக செய்திகள்

ஈரான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது.

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பெர்தொஷி சதுர்கத்தில் இன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குவாட்ஸ் தினம் என்ற பெயரில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்த சதுர்க்கத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT