வாஷிங்டன்,
13 அமெரிக்க வீரர்களை சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ மேஜர் நிடால் ஹசனுக்கு, துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஒருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைப் பொதுமக்கள் நேரலையில் பார்க்க முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 2009-ஆம் ஆண்டு போர்ட் ஹூட் ராணுவத் தளத்தில் ஆயுதமின்றி இருந்த 13 அமெரிக்க ராணுவ வீரர்களைச் சுட்டுக் கொன்ற நிடால் ஹசனுக்கு நிறைவேற்றப்படும் மரண தண்டனை நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறும் முதல் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய மரண தண்டனை நிறைவேற்றமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், ஹசானுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இது 60 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் முதல் மரண தண்டனை நிறைவேற்றமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3 ஆம் தேதி நிறைவேற்றப்படவுள்ள இந்த தண்டனையை பொதுமக்கள் நேரலையில் பார்க்கும் வகையில் ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.