உலக செய்திகள்

போப் ஆண்டவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை

புனித பேதுரு தேவாலயத்தில் போப் ஆண்டவர் ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தினார்.

வாடிகன்,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் உலகளாவிய மதத்தலைவராக போப் லியோ (வயது 71) உள்ளார். நேற்று புனித பேதுரு தேவாலயத்தில் அவர் ஞாயிறு ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தினார். அப்போது புனித பேதுரு சதுக்கத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் போப் ஆண்டவர் தான் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதாவது தனது நுரையீரலில் சிறிய முடிச்சு ஒன்று வளர்ந்து உள்ளதாகவும், அதனை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அகற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வாரம் அவசரமாக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். வழக்கமான பரிசோதனையில் இது ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ரோமில் உள்ள கெமெல்லி ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை நடைபெற உள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் ஒரு வாரம் ஓய்வெடுப்பார் என்றும், அவரது அடுத்த மாத தென் அமெரிக்கப் பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வாடிகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT