ஹனோய்,
வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரத்தை நோக்கி 33 பயணிகளுடன் நள்ளிரவில் ஒரு சொகுசு பஸ் புறப்பட்டு சென்றது.
இந்த பஸ் அதிகாலை டாங் நெய் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பகுதியில் தீப்பிடித்து, சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் மளமளவென தீ பரவியது. விழித்தெழுந்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு வெளியே ஓடினர். ஆனால் பஸ்சிலிருந்து வெளியேறமுடியாமல் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.