உலக செய்திகள்

இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலைநடுக்கம் அபேபுரா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.

இந்நிலநடுக்கம் 37.4 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது பொருளிழப்போ ஏற்பட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.