கோப்புப்படம் 
உலக செய்திகள்

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

தெற்கு அலாஸ்கா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அலாஸ்கா,

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT