உலக செய்திகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் மகிந்த ராஜபக்சே அனுமதி

2005 முதல் 2015 வரை அதிபராகவும், பின்னா் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார் மகிந்த ராஜபக்சே.

கொழும்பு,

இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபக்சே (80) அவசர மருத்துவ சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சே (வயது 80), அவசர மருத்துவ சிகிச்சைக்காக நேற்று காலை அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்க ளின் கண்காணிப்பில் இருந்து வருவதாக அவரது கட்சியான 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்பு என்ன என்பது குறித்தோ, மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்தோ அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் 2005 முதல் 2015 வரை அதிபராகவும், பின்னா் பிரதமராகவும் பதவி வகித்த மகிந்த ராஜபக்சே, அந்நாட்டு அரசியலில் நீண்ட செல்வாக்கு செலுத்தியவா். 2009-இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது இவரே அதிபராக இருந்தாா்.

தொடா்ந்து, 2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ராஜபட்ச குடும்பத்தினரின் அரசியல் செல்வாக்கு சரிவைச் சந்தித்த நிலையில், தற்போதைய அதிபா் அநுர குமார திசாநாயக தலைமையிலான அரசு முந்தைய ஆட்சிக்கால முறைகேடுகளை தீவிரமாக விசாரித்து வருகிறது. அந்தவகையில், ராஜபக்சேவின் மகன், மனைவி உள்ளிட்டோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT