உலக செய்திகள்

ரஜினி 'ஸ்டைலில்’ தமிழில் தீபாவளி வாழ்த்து கூறிய மலேசிய பிரதமர்

உலகம் முழுவதும் தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ளது.

கோலாலம்பூர்,

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் ரஜினி ஸ்டைலில் தமிழில் தீபாவளி வாழ்த்து கூறினார்.

தீபாவளி பண்டிகை

இந்து மதப்பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மலேசிய பிரதமர் வாழ்த்து

இந்நிலையில், மலேசியா நாட்டின் பிரதமர் ட்த்தோ செரி அன்வர் இப்ராகிம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசியாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் தேவராஜ் டேவிட் உடன் இணைந்து பிரதமர் அன்வர் இப்ராகிம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினி காந்த் நடித்திருந்த ஸ்டைலில் காரில் வந்த பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்ஸ்டா பிரபலம் தேவராஜ் உடன் இணைந்து தீபாவளி வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் அன்வர் இப்ராகிம் தமிழில் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பிரதமர் அன்வர் இப்ராகிம் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT