ஆன்லைனில் பார்த்த பெண்ணை |திருமணம் செய்து கொள்வதற்காக சொத்துக்களை விற்று விட்டு, சுமார் 1,900 கி.மீ பயணித்த மார்டின் என்பவருக்கு, அது ஏஐ ஆல் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
சமூக வலைதளத்தில் தன்னை கவர்ந்த பெண்ணை பார்த்து அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னிடம் இருந்த சொத்துகளை விற்று 1,900 கிலோமீட்டர் தொலைவு பயணித்த 49 வயது நபருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காதலித்தது பெண்ணை அல்ல. ஏ.ஐ.-யால் உரு வாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என்பது தெரியவந்து ஏமாந்ததால் நொந்துபோனார். அவருக்கு வயது 49. பெயர் எடிமார் மார்ட்டின்ஸ். திருமணம் செய்யவில்லை. கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கில் உள்ள மாரன்ஹாவோ எனும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு தாய் மட்டுமே துணையாக இருந்தார். சமீபத்தில் அவரது தாயும் இறந்துவிட்டார். தனிமையில் தவித்த அவருக்கு சமூக வலைதளத்தில் மட்டுமே தான் ஆறுதல். சமூக வலைதளம் மூலம் ஜெசிகா ஒலிவேரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் ஆவார். அவரை கரம்பிடிக்க தனது சொத்துகளை விற்று 1,900 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அங்கு சென்ற பிறகு தான் ஜெசிகா ஒலிவேரியா ஏ.ஐ. என்பது அவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் மிகவும் மனம் நொந்துபோனார். அனைத்து பணமும் செலவானதால் அவருக்கு ஊர் திரும்ப பணம் இல்லாமல் தவித்த அவருக்கு சமூகசேவகர்கள் மூலம் தங்குமிடம், உணவு வழங்கினார்கள். பிறகு அவர்கள் டிக்கெட் எடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
என்னுடன் வந்து தங்கினால், அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என யாரோ ஒருவர் ஏஐ பயன்படுத்தி பதிவிட்ட இந்த வீடியோவை நம்பி கடந்த 6 மாதங்களில் 3 பேர் தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.