புதன் கோள் 
உலக செய்திகள்

திராட்சை பழம் போல சுருங்கும் புதன் கோள்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

புதன் கோளானது ஒட்டுமொத்தமாக சுமார் 4,900 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது.

வாஷிங்டன்,

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோள், எதிர்பார்த்ததை விட மிக அதிவேகமாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரிய வெப்பத்தால் உலர்ந்து போன திராட்சை பழத்தை போல காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

23 கிலோ மீட்டர் சுருங்கியது

புதன் கோளானது ஒட்டுமொத்தமாக சுமார் 4,900 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் அனுப்பிய விண்கலன்கள் கொடுத்த தரவுகளின்படி, இந்த கோள் தற்போது 23 கிலோ மீட்டர் அளவுக்கு சுருங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இது விஞ்ஞானிகள் முன்னதாக கணித்திருந்த அளவை விட 30 சதவீதம் அதிகமாகும்.

காரணம் என்ன?

சூரியனுக்கு மிக அருகில் புதன் கோள் அமைந்துள்ளதால், அதன் வெளிப்புறத்தில் கடுமையான சூரிய வெப்பம் தாக்குகிறது. அதே நேரத்தில், அதன் உட்பகுதி மிக வேகமாக குளிர்ந்து கொண்டே வருகிறது. இந்த வெளிப்புற வெப்பம் மற்றும் உட்புற குளிர்ச்சிக்கு இடையே ஏற்படும் கடுமையான வெப்பநிலை மாறுபாடு காரணமாகவே, இந்த சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த அதிவேக சுருக்கத்தால் புதன் கோளின் மேற்பரப்பில் பெரிய அளவிலான பாறை மடிப்புகளும், பிளவுகளும் ஏற்பட்டு வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT