உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

இஸ்லாமாபாத் அருகே நள்ளிரவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே நள்ளிரவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. 12.57 மணி அளவில் பூமியில் இருந்து 190 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

SCROLL FOR NEXT