உலக செய்திகள்

500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை; அதிக மதிப்பிற்குரிய பெலாரஸ் அதிபருக்கு நன்றி - டிரம்ப்

அவருடன், அமைதிக்கான வாரிய கூட்டம் அடுத்து எப்போது நடைபெறும் என நான் ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் என டிரம்ப் அதில் பதிவிட்டு உள்ளார்.

வாஷிங்டன் டி.சி.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோசியல் என்ற வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், அதிக மதிப்பிற்குரிய பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ உடன் என்னுடைய அரசின் தூதர் ஜான் கோலே கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் மூலம் கூடுதலாக 250 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதனால், கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதனை செய்ததற்காக என்னுடைய இனிமையான நன்றியை அவருக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். அவருடன், அமைதிக்கான வாரிய கூட்டம் அடுத்து எப்போது நடைபெறும் என நான் ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் என டிரம்ப் அதில் பதிவிட்டு உள்ளார்.

SCROLL FOR NEXT