காத்மாண்டு,
நேபாளம் வெள்ளம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் இருந்து தப்பித்து தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஓடும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கட்டுக்கடங்காத அந்த பெருவெள்ளம் தனது பாதையில் இருந்து மரங்கள், செடிகள், கட்டடங்கள், பாலங்கள், கார், பேருந்து என அனைத்தையும் அடித்து இழுத்து செல்கிறது. அந்த பெண் தனது 2 குழந்தைகளின் கையை பிடித்துக்கொண்டு சாலையில் இருந்து மேடான பகுதியை நோக்கி விரைந்து ஓடிச்செல்கிறார். அவர்கள் அந்த சாலையில் இருந்து சில நொடிகளில் அந்த இடத்தை வெள்ள நீரில் முழுவதுமாக ஆக்கிரமித்தது.
சாலையில் நடப்பட்டிருந்த மின் கம்பங்கள் வெடித்து சிதறுகிறது.அந்த வீடியோவில் இருந்த 2 குழந்தைகளும் பள்ளி செல்லும் சீருடை அணிந்துள்ளனர். சமூகவலைத்தளத்தில் அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
எந்தவொரு சூழலிலும், 2 குழந்தைகளை அவ்வளவு வேகமாகச் செயல்பட வைப்பதே ஒரு வியக்கத்தக்க விஷயம், உயிர் பிழைப்பதே கடினமான ஒரு குழலில் அதைச் சாதித்தது என்பது இன்னும் மிக உயர்ந்த நிலையிலான ஒரு செயலாகும் என பாராட்டி உள்ளனர்.