உலக செய்திகள்

நைஜீரியாவில் மசூதியில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்; 9 பேர் பலி

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நைஜர்,

நைஜீரியாவின் மத்திய நகரான நைஜரில் பாரே என்ற கிராமத்தில் அமைந்த மசூதி ஒன்றில் தொழுகை நடந்து வந்தது. இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் மோட்டார் பைக்குகளில் அந்த கிராமத்திற்கு வந்தனர்.

அவர்கள் நேராக, மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர்.