உலக செய்திகள்

பூமியின் அழகை பாருங்க! விண்வெளியில் இருந்து படம் பிடித்த நாசா குழுவினர்

நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான நீல அழகைப் படம்பிடித்துள்ளனர்

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் லட்சிய திட்டத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது. பல கட்ட சோதனைகளுக்கு பிறகு ஆர்டெமிஸ்-2 திட்டத்தை நாசா வெற்றிகரமாக செயல்ப டுத்தியது. கனடா நாட்டின் விண்வெளி வீரர் உள்பட 4 வீரர்கள் அடங்கிய இந்த குழுவினர் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி வந்து விண்கலத்தின் உயிர் காக்கும் வசதிகளைச் சோதித்தனர்.

பின்னர், 'டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன்' என்ற என்ஜின் எரிப்பு மூலம் நிலவை நோக்கிச் செலுத்தப்பட்டனர். இவர்கள் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையைப் படைக்க உள்ளனர். இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு ரூ.8.64 லட்சம் கோடி ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் 2028-ல் திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களின் நிலவுத் தரையிறக்கத்துக்கு (ஆர்டெ மிஸ் 4) ஒரு முன்னோட்டமாக அமையும்.

இதனிடையே, நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான நீல அழகைப் படம்பிடித்துள்ளனர். இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.