நாசா 
உலக செய்திகள்

பூமியை நோக்கி விழும் நாசாவின் பிரமாண்ட தொலைநோக்கி; இந்தியாவுக்கு ஆபத்தா?

நாசாவின் 1½ டன் எடையுள்ள ‘ஸ்விப்ட்' தொலைநோக்கி கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வேகமாக இறங்கி வருவதால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரமாண்ட தொலைநோக்கி

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2004-ம் ஆண்டு 'ஸ்விப்ட் அப்சர்வேட்டரி' என்ற அதிநவீன விண்வெளி தொலைநோக்கியை விண் ணில் செலுத்தியது. விண்வெளியில் ஏற்படும் பிரமாண்ட வெடிப்புகள், காமா கதிர் வெடிப்புகள் மற்றும் சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இது அனுப்பப்பட்டது.

கடந்த 22 ஆண்டுகளாக விண்வெளியில் வலம் வந்த இந்தத் தொலைநோக்கி, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமா கதிர் வெடிப்புகளையும், 1,400 வெடிக் கும் நட்சத்திரங்களையும் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான சூரிய செயல்பாடுகள் காரணமாக, இந்தத் தொலைநோக்கி திட்டமிட்ட காலத்துக்கு முன்பாகவே பூமியை நோக்கி வேகமாக இறங்கத் தொடங்கியது.

மீட்பு ரோபோ தோல்வி

இதைக் காப்பாற்றுவதற்காக 'கேடலிஸ்ட் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் 'லிங்க்' என்ற 3 கைகளைக் கொண்ட ரோபோவை நாசா கடந்த ஜூலை மாதம் அனுப்பியது. ஆனால், அந்த மீட்பு ரோபோ தொலைநோக்கியின் அருகே செல்ல முடியாமல் செப்டம்பர் மாதமே பூமியில் விழுந்தது.

இதனால் அக்டோபர் மாத இறுதியில் இந்தத் தொலைநோக்கியின் செயல்பாடு கள் முழுமையாக நிறுத்தப்பட்டன. தற்போது கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்த 1½ டன் எடையுள்ள ஸ்விப்ட் தொலைநோக்கி, வரும் வெள்ளிக்கிழமைக்குள் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து அழியும் என்று அமெரிக்க விண்வெளிப் படை கணித்துள்ளது.

எரிந்து சாம்பலாகிவிடும்

இதன் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டல உராய்வினால் எரிந்து சாம்பலாகி விடும் என்றாலும், இதில் உள்ள அடர்த்தியான டங்ஸ்டன் உலோகப் பகுதிகள் மற்றும் கண்ணாடியின் உடைந்த பாகங்கள் பூமியில் விழ வாய்ப்புள்ளது.இவை பெரும்பாலும் கடலில் விழக்கூடும் என்றாலும், இது விழக்கூடிய அச்சுறுத் தல் மண்டலத்தில் இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய-தெற்கு அமெரிக்கா ஆகிய பகுதிகள் உள்ளதாக நாசாவின் முதன்மை விஞ்ஞானி பிராட் சென்கோ தெரிவித்துள்ளார். இதனால் இந்தத் தொலைநோக்கியின் பயணப் பாதையை அமெரிக்க விண்வெளிப் படை தீவிரமா கக் கண்காணித்து வருகிறது.

SCROLL FOR NEXT