உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற நபர் அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். மேலும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை விட ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் கடினமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: -உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி உண்மையான ஆர்வம் காட்டவில்லை. அமைதி ஒப்பந்தம் வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினாலும், அதற்கான உடன்பாட்டை எட்ட விரும்பவில்லை. ஒப்பந்தத்தைவிரும்புவதாக ஜெலன்ஸ்கி கூறுகிறார்; ஆனால் உண்மையில் விரும்பவில்லை. ஜெலன்ஸ்கி மீது எனக்கு பெரிய அபிமானம் இல்லை. அவர்கள் அந்த நாட்டையே அழித்துவிட்டனர்” என்றார்.
உக்ரைன் - ரஷியா எரிசக்தி கட்டமைப்புகள் தாக்குதல் நடத்தாது என்று ஒப்புக்கொண்டு இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதலை தொடர்ந்தன. இதனால் கோபம் அடைந்த டிரம்ப், உக்ரைனை சாடினார். டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் மீண்டும் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய தாக்குதல்கள் உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்துகின்றன இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.