உலக செய்திகள்

இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த நேபாளம்.! - காரணம் என்ன.?

இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது.

காத்மாண்டு,

இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதாகவும், எல்லை பகுதிகளில் அவற்றை தனிமைப்படுத்தும் வசதி இல்லாததாலும் இத்தடை விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய மாம்பழங்களுடன் போட்டியிட முடியாமல் திணறிய உள்நாட்டு மாம்பழ விவசாயிகளுக்கு இது ஊக்கம் அளிக்கும். இருப்பினும், நேபாளத்தின் தேவைக்கு உள்நாட்டு மாம்பழங்கள் மட்டும் போதாது என்றும், வரத்து குறைவால் மாம்பழம் விலை கணிசமாக உயரும் என்றும் அச்சம் எழுந்துள்ளது.