நேபாளத்தில் இமயமலையில் உற்பத்தியாகும் கிளை ஆறுகளால் ஆன போடேகோஷி ஆற்றில் நேற்று முன்தினம் காலை சுமார் 8.30 மணியள வில் ஏற்பட்ட மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் உருக்குலைத்து உள்ளது.குறிப்பாக அந்த நதியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிச்சரிவு ஒன்று தடுத்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம் அருகில் உள்ள திமுர் பகுதியைக் கடுமையாக பாதித்தது. இமயமலை சுனாமி என அழைக்கப்படும் அளவுக்கு கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் என ஆற்றின் போக்கில் கரையோரம் இருந்த கட்டமைப்புகள் அனைத்தும் உருக்குலைந்தன.
நெஞ்சை பதற வைக்கும் இந்த இயற்கை பேரிடரை முழுமையாக அறிவ தற்குள் அந்த பகுதியில் வசித்து வந்தவர்கள் மற்றும் பள்ளத்தாக்குப் பகு தியான அந்த இடங்களை சுற்றிப்பார்க்க சென்ற உள்நாடு, வெளிநாடு களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.கற்கள், மண், சேறு, சகதி என இமயமலையில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டவை அனைத்தும் அந்த பிராந்தியம் முழுவதும் பல அடி உயரத்துக்கு நிறைத்து இருக்கிறது.ரசுவா, நுவாகோட் மற்றும் தடிங் ஆகிய 3 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளன. இந்த மாவட்டங்களின் பெரும் பகுதிகள் வெள்ளமும், சேறும் நிரம்பி காணப்படுகின்றன.
மேலும் அந்த பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் கல், மண் மற்றும் சகதியால் நிறைந்து போக்குவரத்தை முடக்கி உள்ளன. முக்கியமாக புற நகர் மாவட்டங்களை தலைநகர் காத்மாண்டுவுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை முடங்கி உள்ளது.அங்கு 35 பாலங்கள், 45 தூக்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. 40 கி.மீ.க்கு மேல் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. இது பெரும்பாலும் மத்திய நேபாளத்தில் நிகழ்ந்துள்ளன.வரலாறு காணாத இந்த பேரிடரில் நிகழ்ந்துள்ள உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.அதேநேரம் சம்பவம் நடந்த நேற்று முன்தினம் சுமார் 100 பேர் உயிரிழந் ததாகவும், 700-க்கு மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும் தகவல் வெளியானது.இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்தது. அதன்படி நேற்று மாலை நிலவ ரப்படி 362 பேர் பலியானதாக நேபாள அரசு அறிவித்தது.
மேலும் 900-க்கு மேற்பட்டோரை காணவில்லை என நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. இதில் ராணுவ வீரர்கள், போலீஸ் காரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் 85 பேர், பல்வேறு நீர்மின் நிலையங்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 162 பேர், 579 சுற்றுலாப்ப யணிகளும் அடங்குவர் என தெரிவித்து உள்ளது.அதேநேரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 1500-க்கும் மேற் பட்டோரை காணவில்லை என நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனல் கூறியுள்ளார்.மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக வும் கூறியுள்ள அவர், இந்த பேரழிவின் முழு அளவையும் கண்டறிய முயன்று வருகிறோம் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதற்கிடையே பெருவெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவார ணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.இதில் நேபாள பேரிடர் தடுப்பு படையினருடன், ராணுவமும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. மேலும் இந்தியா, சீனா, தென்கொரியா போன்ற வெளிநாடுகளும் மீட்புக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளன.இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்து வரும் பிரதமர் பலேந்திர ஷா, சக மந்திரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்.இப்படி பல நாடுகள் இணைந்து நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் ஆங்காங்கே சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த வெளிநாட்டினர் உள் பட 800-க்கு மேற்பட்டோர் நேற்று மாலை வரை மீட்கப்பட்டு உள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக காத்மாண்டு உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்படுகின்றன. அந்தவகை யில் நுவாகோட், தடிங், சிதவான், கோர்கா, நவல்பார்சி கிழக்கு மற்றும் மேற்கு போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.இதில் சிதவான் பகுதி சுற்றுலாவுக்கு பேர்போன பகுதியாகும். இங்கு நடைபெறும் வன சவாரியில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று வருகின்றனர்.நேபாளத்தை உலுக்கிய இந்த பேரிடரில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டி னரும் சிக்கியுள்ளனர். இதில் நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழர்கள் உள்பட சுமார் 290 இந்தியர்களும் மாயமாகி இருப்பது இந்தி யாவை அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.