Image Credits: Grok AI 
உலக செய்திகள்

இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ் அப்பில் விரைவில் வரும் புதிய வசதி: பயனர்கள் உற்சாகம்

வாட்ஸ் அப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த புதிய அப்டேட், பயனர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தும் செயலிகளாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவை உள்ளன. ஸ்மார்ட்போன்களில் தவிர்க்க முடியாத செயலிகளாக இந்த மூன்று செயலிகளும் இடம் பெற்றுள்ளன. பேஸ்புக்கைப் பொறுத்தவரை வீடியோக்கள், பதிவுகள் போன்றவற்றை பதிவிடும் தளமாக உள்ளது. பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை சரிந்தாலும், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களாக உள்ளன. இந்த மூன்றுமே மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானவை என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதன் காரணமாக சமீப காலமாக இன்ஸ்டாகிராமிலிருந்து பல புதிய அம்சங்களை வாட்ஸ் அப் பெற்றுவருகிறது. அந்த வகையில், புதிதாக ஒரு அப்டேட் வாட்ஸ் அப்பில் விரைவில் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, இன்ஸ்டாகிராமில் ‘நெருங்கிய நண்பர்கள்’ (Close Friends) என்றொரு ஆப்ஷன் உள்ளது. இதில் நெருங்கிய நட்பில் உள்ளவர்கள் மட்டுமே பதிவுகளை பார்க்கும் வகையில் பகிர முடியும். இதே வசதி விரைவில் வாட்ஸ் அப்பிலும் கொண்டு வரப்பட இருக்கிறது. ‘ஸ்டேடஸை யார் பார்க்க முடியும்’ என்ற மெனுவில், ‘எனது தொடர்புகள்’, ‘எனது தொடர்புகள் தவிர’, ‘ஒன்லி ஷேர் வித்’ மற்றும் ‘க்ளோஸ் பிரெண்ட்ஸ்’ போன்ற விருப்பங்கள் இடம்பெறும். இதனை பயன்படுத்தி, பயனர்கள் தங்களின் ஸ்டேடஸை யாருக்கு காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும் காட்டும் வகையில் செட்டிங்ஸில் மாற்றிக் கொள்ள முடியும். வாட்ஸ் அப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த புதிய அப்டேட், பயனர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.