நீண்ட காலமாக ஒரே திடமான பாறையாக நகரும் என்று நம்பப்பட்ட இந்திய தட்டு, உண்மையில் பிளவுபடுவதும், வளைவதுமாக கண்டறியப்பட்டுள்ளது.இதனால் வடக்கு மத்திய இந்தியப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நில அதிர்வு வரைபடங்களை இன்னும் துல்லியமாக உருவாக்கவும், இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கணிக்க இந்த ஆய்வு பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ அமைப்பின் நிதி உதவியோடு நடந்த இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சர்வதேசப் புவி இயற்பியல் ஆய்விதழ் என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.