வெல்லிங்டன்,
இந்தியாவிற்கு வருகை தந்த நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை மந்திரி டாட் மெக்லேவை இந்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் வரவேற்றார். இரு தலைவர்களின் முன்னிலையிலும், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்து நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸ்ன் ஒரு வீடியோவில் கூறியதாவது:-
இந்தியாவுடன் ஒரு முக்கியமான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம். இந்த ஒப்பந்தம் மூலம் நம் நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்காக ஒரு பெரிய சந்தை திறக்கப்படும்.
இது போன்ற ஒப்பந்தம் ஒரு தலைமுறையில் ஒரு முறை மட்டுமே நடக்கும். இதனால் நமது ஏற்றுமதியாளர்கள் 1.4 பில்லியன் கோடி மக்களையும் அவர்களின் பொருளாதாரத்தை அணுகவும் இது ஒரு அரிய வாய்ப்பு.
இது உலகத்தின் மூன்றாவது பெரிய ஒப்பந்தம் ஆகும். இது நம் நாட்டின் ஏற்றுமதியாளர்களை மற்ற போட்டியாளர்களுக்கு சரிசமமாக அல்லது அதற்கும் மேல் சிறந்த வழியை அமைத்து கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.