ஹராரே,
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள கரும்பு உற்பத்திக்கு புகழ்பெற்ற டிரையாங்கிள் நகரில் ஒரு கோர விபத்து அரங்கேறியுள்ளது.
அப்பகுதியில் வேகமாக வந்துகொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றை கவனிக்காமல், விதிமுறைகளை மீறி பஸ் டிரைவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரெயில் பஸ் மீது பயங்கரமாக மோதித் தள்ளியது.
இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 25 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த வாரம் பள்ளி குழந்தைகள் சென்ற பஸ் தீப்பற்றி 7 பேர் பலியான சோகம் மறைவதற்குள் இந்த விபத்து நடந்துள்ளது.