உலக செய்திகள்

டிரம்பை மொஜ்தபா கமெனி சந்திக்க வாய்ப்பு இல்லை- ஈரான்

ஈரான் - அமெரிக்கா போர் 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை சந்திக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், டிரம்பை மொஜ்தபா கமெனி சந்திக்க மாட்டார் என்று ஈரான் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மொஜ்தபா கமெனியின் மூத்த ஆலோசகர் மொஹ்சன் ரெசாய் அளித்த பேட்டியில், “டிரம்பை மொஜ்தபா கமெனி சந்திக்கும் வாய்ப்பு இல்லை. தற்போது நாங்கள் பேச்சுவார்த்தையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம். ஆனால் அந்த செயல்முறையை டிரம்ப் முடக்கியுள்ளார்.

எனவே அத்தகைய சந்திப்பு நடைபெறாது.பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்பு அமெரிக்காவிடமே உள்ளது. முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா உண்மையை கூறவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இந்த விவகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்தார்.