வாஷிங்டன்,
அமெரிக்காவில் அக்டோபர் 1-ந்தேதி தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் 30-ந் தேதி வரை நிதியாண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற நிதியாண்டுக்கான புதிய எச்-1பி விசா விண்ணப்ப பதிவை கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா தொடங்கியது.
வருகிற நிதியாண்டு முதல் ஆண்டுக்கு மொத்தம் 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே புதிதாக எச்-1பி விசா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எச்.1-பி விசாவுக்கான வரம்பு எட்டப்பட்டதாகவும், புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக குலுக்கல் முறையில் எச்-1பி விசா வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது ஊதியம் மற்றும் படிப்பு அடிப்படையில் விசாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 981 பேர், எச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்த நிலையில், இந்தமுறை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 600 (38.5 சதவீதம் சரிவு) ஆக பதிவானது.