உலக செய்திகள்

ஹார்மூஸ் ஜலசந்தியில் எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது: ஈரான் திடீர் அறிவிப்பால் பதற்றம்

அந்நிய சக்திகளின் சட்டவிரோத குறுக்கீடு, பாதுகாப்பு சூழலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று ஈரான் தெரிவிக்கின்றது.

தெஹ்ரான்

ஹார்மூஸ் ஜலசந்தியில் எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது என்ற ஈரானின் திடீர் அறிவிப்பால் பதற்றம் அதிகரித்து உள்ளது.

ஈரான் நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு ஈரானை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கியது என தெரிவித்தது.

எனினும், ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை.

உத்தரவாதம் அளிக்கப்படாது

இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று தெரிவித்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளியது.

இதனால், ஆத்திரமுற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதிகரித்த போர் பதற்றம்

இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. அவர் தொடர்ந்து கூறும்போது, ஈரானுடன் பேசி நேரம் வீணாக்க விரும்பவில்லை. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் 3 கப்பல்களை தாக்கி ஈரான் அழித்து விட்டது என்று குற்றச்சாட்டாக கூறினார்.

அதற்கு முன்பு, தங்களுடைய ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி விட்டது என கூறி, குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கி ஈரான் பதிலடி கொடுத்தது.

ஈரான் சுகாதார அமைச்சகம்

இந்த நிலையில், ஈரானை கடுமையாக எச்சரிக்கும் வகையில் டிரம்ப் பேசினார். அப்போது அவர், ஈரான் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றது. பல தசாப்தங்களாக மக்களை கொன்று குவித்து வருகிறது என்றார். இதன் தொடர்ச்சியாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என கூறப்படுகிறது. இதில் பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர் என்றும் ஈரான் தெரிவித்தது.

இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்பட்ட சூழலில், மேற்காசிய பகுதியில் தன்னுடைய தலையீட்டை நிறுத்தி கொள்ளும் வரை ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி மூடப்படுகிறது என்று ஈரான் இன்று காலை திடீரென்று அறிவித்து உள்ளது.

சட்டவிரோத குறுக்கீடு

இதுபற்றி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அடுத்த உத்தரவு வரும் வரை ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்படும். மேற்காசிய பகுதியில் அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை தொடர்ந்து ஜலசந்தி பகுதி மூடப்பட்டு இருக்கும். எந்த கப்பலுக்கும் இந்த வழியே கடந்து செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்து உள்ளது.

அந்நிய சக்திகளின் சட்டவிரோத குறுக்கீட்டை தொடர்ந்து பாதுகாப்பு சூழலை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் சரக்கு கப்பல்கள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.