உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை தவறுதலாக சொந்த பிராந்தியத்தை தாக்கியதாக தகவல்

சோதனயின் போது, வடகொரியாவின் ஏவுகணை தவறுதலாக சொந்த பிராந்தியத்தை தாக்கியது தெரியவந்துள்ளது. #KimJongUn #northkorea

பையோங்

வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகள் ஐநா தீர்மானங்கள் போன்றவற்றை மீறி அடாவடியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன.புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், வடகொரியா கடந்த ஆண்டு ஏப்ரலில் ஹவ்சாங்க்-12 என்ற ஏவுகணையை பங்சாங்க் என்ற ஏவுதளத்தில் இருந்த சோதனை செய்தது. விண்ணில் பாய்ந்த அந்த ஏவுகணை 24 மைல் தொலைவில் சென்ற போது திடீரென வடகொரியாவில் உள்ள டோக்சான் என்ற நகரில் விழுந்தது பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரிய தலைநகர் பையோங்கில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் டோக்சான் நகரம் உள்ளது. நடு வானில் இந்த ஏவுகணை வெடித்துச்சிதறியதாக முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது, அங்குள்ள குடியிருப்பு பகுதியை தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஏவுகணை விழுந்ததில், தொழிற்சாலை அல்லது விவசாய கட்டுமானங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதாக இணையதள செய்திகள் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், கடந்த வாரம் கூகுள் எர்த் மூலம் டோக்சான் நகரை தேடிய போது முன்னர் இருந்த பல கட்டிடங்கள் இப்போது இல்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. #KimJongUn | #northkorea