அபுதாபி,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அவர் நேற்று ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் நயத் அல் நயானை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம், இரு நாட்டு பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அஜித் தோவலும், ஷேக் முகமது பின் நயத்தும் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக அஜித் தோவல் கடந்த 20ம் தேதி சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.