லாகூர்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட் பலுசிஸ்தான் இமயமலையின் போர்ட் பீக் என்ற சிகரம் உள்ளது. இந்த மலைச்சிரகத்தில் ஏற உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலா பயணிகளும், மலையேற்ற வீரர்களும் வருகின்றனர். இது உலகின் 14வது மிக உயரமான மலைச்சிகரமாகும்.
இந்நிலையில், இமயமலையின் போர்ட் பீக் சிகரத்திற்கு நேற்று 10 மலையேற்ற வீரர்கள் ஏறியுள்ளனர். இதில் 5 பேர் நேபாளத்தையும், எஞ்சியோர் பாகிஸ்தான், ஓமன், சீனா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர்.
போர்ட் பீக் சிகரத்தை நோக்கி ஏறியபோது திடீரென பனிப்புயல் ஏற்பட்டது. இந்த பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 10 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து மீட்புப்பணியை தொடங்கியுள்ள அதிகாரிகள் மலையேற்ற வீரர்கள் 4 பேரின் உடல்களை மீட்டனர். எஞ்சியபோரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.