உலக செய்திகள்

ரஷியாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

ரஷியாவில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உக்ரைனின் டிரோன் தாக்குதல்களால் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டு, அந்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும், ரஷியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அதிபர் புதினின் 'யுனைடெட் ரஷியா' கட்சிக்கு இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில், போருக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே எதிர்க்கட்சி யான 'யப்லோகோ' கட்சியின் அங்கீகாரத்தை கோர்ட்டு மூலம் புதின் அரசு அதிரடியாக ரத்து செய்தது.

மேலும், போரை விமர்சித்த முக்கிய தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டும், நாட்டை விட்டு விரட்டப்பட்டும் முடக்கப்பட்டுள்ளனர். மக்களின் அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.

SCROLL FOR NEXT