உலக செய்திகள்

இங்கிலீஷ் கால்வாயை கட்டுமரப் படகில் கடக்க ஆர்வம் காட்டும் பயணிகள்

எஞ்சின் சத்தம் மற்றும் கரும்புகை இல்லாத இந்தப் பயணம் குறித்து பயணிகள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

லண்டன்,

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இங்கிலீஷ் கால்வாயை, பழங்காலத்தைப் போலவே கட்டுமரப் படகுகள் மூலம் கடக்க சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நவீன மோட்டார் படகுகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் 'செயில் லிங்' (SailLink) என்ற நிறுவனம் இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளது.

17 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாய்மரப் படகில் ஒரே நேரத்தில் 12 பேர் வரை பயணிக்கலாம். ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு 110 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கால்வாயைக் கடக்க சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது.

எஞ்சின் சத்தம் மற்றும் கரும்புகை இல்லாத இந்தப் பயணம் குறித்து பயணிகள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய பசுமைப் போக்குவரத்து முயற்சிகள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT