அமெரிக்கா தேர்தல்
அமெரிக்காவில் நடந்த தேர்தலில் டிரம்பின் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி வேட் பாளர்கள் தோல்வி அடைந்தனர். இதற்கு அமெரிக்காவில் வசித்து வரும் இந் திய வம்சாவளி வாக்காளர்கள் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி அமெரிக்க தேர்தல் ஆய்வாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெ ரிக்க பல்கலைக்கழக அரசியல் அறிவியல் உதவி பேராசிரியருமான சுமித்ரா பத் ரிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு கொள்கை, இந்தியா மீதான அமெரிக்காவின் போக்கு, இந்தியர்களுக்கு எதிரான குடியுரிமை கொள்கைகள் ஆகியவற்றால் இந்திய வம்சாவளியினர் டிரம்ப்புக்கு எதிராக ஓட்டுப்போட்டு இருக்கிறார்கள்.
டிரம்ப் மீதான அதீத அதிருப்தி, கோபம் காரணமாக அவர்கள் குடியரசு கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து இருப்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடு களை விட கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு சிறந்த நாடாக அமெரிக்கா பார்க்கப்படுகிறது. இந்தியா குறித்த நிலைப்பாட்டில், அமெரிக்க அரசியல்வாதிக ளுக்கு அக்கறை உள்ளதா? என்று கேட்டால் அவர்கள் எப்போது 'இல்லை' என்றே பதில் கூறுவதாக இந்திய வம்சாவளியினர் தெரிவிக்கிறார்கள்.புலம்பெயர் சமூகத்தின் போக்கு அமெரிக்க தேர்தலில் பிரதிபலித்துள்ளது. அமெ ரிக்காவின் செனட் சபையில் 6 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர். மேலும் அமெரிக்காவில் நடந்த பல்வேறு தேர்தல்களில் 30 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தோற்றுள்ளார். அவர் டிரம்ப் ஆதரவு வேட்பாளர் என்ற ஒரே காரணத்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் ஈரானுக்கு எதிரான போர் காரணமாக அமெரிக்காவில் பணவீக்கமும் அதிகரித் துள்ளது.பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும் டிரம்ப் கட்சி தோற்க ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய வம்சாவளியினரை தவிர, அமெ ரிக்க மக்களும் டிரம்புக்கு எதிராக வாக்களித்து இருப்பது தெரியவந்துள்ளது. எச்-1பி விசா விவகாரம், மக்கள் இன பாகுபாடு உள்ளிட்டவையும் டிரம்ப் கட்சி தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வாழும் நக ரங்களில் 2-வது நகரமாக கருதப்படும் டெக்சாசில் குடியரசு கட்சி வேட்பாளர் போ பிரஞ்ச், இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்கர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிட்டார்.அது மக்களிடையே கலவரம் ஏற்படும் அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யது. இதனால் இந்திய வம்சாவளியினர் தேர்தலில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு எதிராக வாக்களித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.