உலக செய்திகள்

தைவான் விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி

தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா உரிமை கொண்டாடி வருகிறது

இஸ்லாமாபாத்,

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானும், சீனாவின் இந்த 'ஒரே சீனா' கொள்கையை ஆதரித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், சீனாவுக்கு ஆதரவாகத் தைவான் நாட்டு விமானங்கள் தனது வான்வெளியில் பறக்கப் பாகிஸ்தான் அரசு திடீர் தடை விதித்ததாகச் செய்திகள் வெளியாகி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இந்தச் சர்ச்சை வெடித்த சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி, தைவானின் முன்னணி விமான நிறுவனங்களான 'ஈவிஏ ஏர்' மற்றும் 'சீனா ஏர்லைன்ஸ்' ஆகியவற்றுக்குத் தங்கள் நாட்டு வான்வெளியைப்பயன்படுத்தப் பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அனுமதியின்படி, தைவான் நாட்டுப் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் வருகிற 2027 மார்ச் 27-ந்தேதி வரை பாகிஸ்தான் வான்வழியாக தடையின்றிப் பறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT