உலக செய்திகள்

தெற்கு பிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

தெற்கு பிலிப்பைன்சில் வீசிய சூறாவளியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

மணிலா,

பிலிப்பைன்சில் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. இதனால் கடும் வெள்ளம் மற்றும் நில சரிவு ஆகியவை ஏற்பட்டு பாதிப்பினை ஏற்படுத்தியது. இந்நிலசரிவில் ஒரு கிராமம் சேதமடைந்தது.

இந்த சூறாவளி தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இதேபோன்று அருகிலுள்ள நகரங்களில் சூறாவளி பாதிப்பினால் 4 பேரும், லானாவ் டெல் சர் மாகாணத்தில் 7 பேரும் பலியாகியுள்ளனர்.