உலக செய்திகள்

பிரான்சில் விமான விபத்து; 11 பேர் பலி

உள்துறை மந்திரி லாரென்ட் நுனெஜ் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளார். அவர் நிலைமையை ஆய்வு மேற்கொண்டார்.

பாரீஸ்

பிரான்சில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட 11 பேர் பலியானார்கள்.

பிரான்ஸ் நாட்டின் கிழக்கே தொம்பிளெயின் நகரில் விமான நிலையம் அமைந்த பகுதியில், விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில், விமானி மற்றும் பயணிகள் 10 பேர் பயணித்தனர். அப்போது திடீரென விமானம் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.

உள்துறை மந்திரி

இந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு உள்துறை மந்திரி லாரென்ட் நுனெஜ் சென்றுள்ளார். அவர் நிலைமையை ஆய்வு மேற்கொண்டார். விமானத்தில் இருந்தவர்கள் நான்சி பகுதியை சேர்ந்த செவிலியர்கள் என கூறப்படுகிறது. முதல் விமான பயண அனுபவம் எப்படி இருக்கும் என பார்ப்பதற்காக சென்றபோது, இந்த விபத்து நடந்துள்ளது.

இதனை தொடர்ந்து, மருத்துவ மற்றும் மனநல ஆதரவு பிரிவை அதிகாரிகள் அமைத்துள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள்.