புதுடெல்லி,
ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையில் முற்போக்கு ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு ஆட்சியை முன்னின்று நடத்தி வந்த சூழலில், ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில், தகாய்ச்சியின் கட்சி வெற்றி பெற கூடிய அளவில் முன்னிலையில் உள்ளது. இதனை முன்னிட்டு, தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற சனே தகாய்ச்சிக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றிற்கு இந்திய-ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய நட்புறவானது ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்து கொண்டார்.