டெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் கடந்த 26ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் கடந்த 6ம் தேதி தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹ்மத் அல் சபாவுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலின்போது குவைத் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.