உலக செய்திகள்

பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் கனடா பயணம்

கனடா பிரதமர் மார்க் கார்னியை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

டெல்லி,

பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் மோடி கனடா பயணம்

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக டிசம்பர் மாதம் கனடாவுக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் , சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

குறிப்பாக, இந்தியா, கனடா இடையே நடைபெற்று வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் இறுதிகட்ட பேச்சுவார்த்தை இந்த பயணத்தின்போது நிறைவடைந்து ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடாவில் இருந்து அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT