உலக செய்திகள்

பிரதமர் மோடி- டிரம்ப் பேச்சு; எலான் மஸ்க்கும் ஆலோசனையில் பங்கேற்றதாக தகவல்

இஸ்ரேல் - ஈரான் போர் குறித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க்கும் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28 -ல் போர் தொடுத்தது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் கடும் பதிலடி கொடுத்து வருகிறது. போரின் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.