உலக செய்திகள்

போலந்து: 6 பேரை சுட்டுக்கொன்ற நபரின் வீட்டில் 3 சடலங்கள் கண்டெடுப்பு

துப்பாக்கி சூடு நடத்திய நபர் தீவிர வலதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வார்சா,

போலந்து நாட்டின் கிராகோவ் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான மார்க்கெட் சதுக்கத்திற்கு காரில் வந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீவிர வலதுசாரி கொள்கைகள்

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் தீவிர வலதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

3 சடலங்கள்

இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய நபரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த நபர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் 3 பேரின் சடலங்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் போலந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT