உலக செய்திகள்

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு

நிலநடுக்கத்தின் வீரியம் மிக அதிகமாக இருந்ததால், கட்டிடங்கள் பலத்த அதிர்வுக்கு உள்ளாகின.

சாண்டியாகோ,

தென் அமெரிக்க நாடான சிலியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

அட்டகாமா பாலைவனம்

நிலநடுக்கம் ஏற்பட்டதை ஜெர்மனி நிலநடுக்கவியல் மையமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. கலாமா நகரத்தில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில், அட்டகாமா பாலைவனத்தில் ஏறத்தாழ 100 கிலோமீட்டர் ஆழத்தில் அது தாக்கியதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் வீரியம் மிக அதிகமாக இருந்ததால், கட்டிடங்கள் பலத்த அதிர்வுக்கு உள்ளாகின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி, வீதிகளிலும் திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சமடைந்தனர்.