ஜகார்த்தா
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து, அதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இதேபோன்று கிழக்கு நுசா தெங்கரா, தெற்கு சுலவேசி மற்றும் மேற்கு நுசா தெங்கரா மாகாணங்களில் சுனாமிக்கான எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதனால், 1.6 முதல் 9.8 அடி வரை அலைகள் மேலே எழும்பும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.