உலக செய்திகள்

பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை

கொலம்பியா, ஈகுவடார் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் அப்பகுதிகளிலும் மக்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

பனாமா,

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. கடுமையான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்க்த்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. நேற்று மாலை 5.56 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் பனாமா சிட்டியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அலறியடித்துக்கொண்டு மக்கள், அவசரமாக ஓட்டம் பிடித்தனர். மெக்சிகோ முதல் பெரு வரையிலான கிழக்கு பசிபிக் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளதால், கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. கொலம்பியா, ஈகுவடார் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் அப்பகுதிகளிலும் மக்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

SCROLL FOR NEXT