பீஜிங்
திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
சீனாவின் தன்னாட்சி பகுதியாக திபெத் உள்ளது. இந்நிலையில், திபெத்தின் உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணியளவில், பாக்கன் கவுண்டிக்கு உட்பட்ட நாக்சு நகரத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளது என்று சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அரசின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டது தொடர்பான தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.