உலக செய்திகள்

பலுசிஸ்தானில் ரிக்டர் 5.7 அளவில் பயங்கர நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் நகருக்கு அருகே இன்று காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பலுசிஸ்தானில் உள்ள ஜல் மக்ஸி, ஜாபராபாத் மற்றும் நசிராபாத் ஆகிய பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT