உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

ஜப்பானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1.53 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜப்பானின் வடகோடியில் உள்ள ஹொக்கைடோ என்ற முக்கிய தீவில் உள்ள சரபெட்சு என்ற சிறிய நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் மேற்கே, 81 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. மேலும் ஜப்பான் வானிலை ஆய்வு மையமும் சுனாமி எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT