உலக செய்திகள்

பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்; 3 பெண்கள் படுகாயம்

தாக்குதல் நடத்திய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசின் போர்ட் டி சில்சி நகரில் உள்ள சாலையில் பொதுமக்கள் இன்று நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

கத்திக்குத்து தாக்குதல்

அப்போது, 2 கத்திகளுடன் வந்த நபர் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக தாக்கினார். இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் கர்ப்பினி உள்பட 3 பெண்கள் (வயது 19,24,36) படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் , கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 3 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.